இன்றைய ராசிபலன் 13-06-2018

மேஷம்: உற்சாகமான நாள். தேவையான பணம் இருந்தாலும்,வீண் செலவுகளும் ஏற்படக்கூடும். சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டியிருக்கும். சிலருக்கு நவீன டிசைனில் புதிய ஆடைகள் வாங்கும் யோகம் உண்டாகும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக பணியாளர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.
ரிஷபம்: மகிழ்ச்சியான நாளாக அமையும். ஆனாலும்,புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். சிலருக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதால் மனதில் சோர்வு உண்டாகும். வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும். பணியாளர்களால் சிறு பிரச்னை ஒன்று ஏற்படும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.
மிதுனம்: மனதுக்கு மகிழ்ச்சி தரும் சம்பவம் நடைபெறும். சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும். தாய்வழி உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் சக பணியாளர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்வது அவசியம். வியாபாரத்தில் பற்று வரவு சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு இருக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு.
கடகம்: தேவையான பணம் கையில் இருப்பதால் செலவுகளைச் சமாளிக்கமுடியும். சிலருக்கு தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். அலுவலகம் தொடர்பான விஷயங்களில் முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
சிம்மம்: புதிய முயற்சிகள் சாதகமாக முடியும்.சகோதரர்கள் வழியில் செலவுகள் ஏற்பட்டாலும், அதனால் மகிழ்ச்சியே உண்டாகும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். நண்பரின் தேவையறிந்து உதவி செய்வீர்கள். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும்.
கன்னி: குடும்பம் அல்லது வேலை தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதை இன்றைக்குத் தவிர்ப்பது நல்லது. சிலருக்கு உறவினர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். அலுவலகத்தில் மேலதிகாரிகள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.
துலாம்: இன்றைக்கு எதிலும் நிதானமாக செயல்படவும். பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. சிலருக்கு தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் வீண்விவாதம் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும் என்றாலும் சமாளித்துவிடுவீர்கள். வியாபாரத்தில் கனிவான அணுகுமுறை அவசியம். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்..
விருச்சிகம்: புதிய முயற்சிகளை காலையிலேயே தொடங்கிவிடுவது நல்லது. தேவையான பணம் இருந்தாலும், தேவையற்ற செலவுகளும் ஏற்படும். தாய்வழி உறவினர்கள் வருகையால் வீட்டில் சிறு குழப்பம் உண்டாகும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், சக பணியாளர்கள் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் பணியாளர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும்.
தனுசு: எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். மாலையில் பள்ளி, கல்லூரிக்கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை இன்றைக்குக் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் நல்ல திருப்பம் ஏற்படக்கூடும்.
மகரம்: சோர்வு நீங்கி உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்ற முயற்சி செய்யவும். உறவினர்கள் வருகையால் திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். சிலருக்குக் குடும்பத்துடன் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.
கும்பம்: காரியங்களில் அனுகூலம் உண்டாகும் நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பொருள் வரவுக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் உற்சாகமாகச் செய்வீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் சிறு பிரச்னை ஏற்படக்கூடும்.
மீனம்: வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். மனதில் உற்சாகம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தினர் உங்கள் யோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடி இருந்தாலும், பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொடங்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like