இந்த 6 ராசியில் உங்க ராசி இருக்கா? அப்போ ஈஸியா அரசாங்க வேலை கிடைச்சிடுமாம்!

ஜோதிட ரீதியாக எந்த ராசிக்காரர்களுக்கு அரசு வேலை கிடைக்கும் யோகம் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்

மேஷம் ராசிக்காரர்கள் எதையும் தைரியமாக எதிர் கொள்ளும் மனப்பக்குவம் கொண்டவர்கள். இவர்கள் போட்டி மனப்பான்மையுடன் அணுகினால் மட்டுமே பிரச்சனைகளை எதிர் கொள்ள முடியும்.

எனவே இந்த ராசிக்காரர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு கிடைப்பதில் சிரமம் ஏற்படும். ஆனால் தீவிரமாக முயற்சி செய்தால் அரசு வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்கள் திறமை நிறைந்தவர்கள், அதே வேளையில் தங்களின் வாய்ப்பிற்காக காத்திருப்பவராகவும் திகழ்வார்கள்.

இந்த ராசிக்காரர், தொடர்ந்து போராடினால் சந்தோஷமான வாழ்வு, அரசாங்க வேலை அல்லது பொதுமக்களுடன் தொடர்புடைய வேலை போன்றவற்றில் ஏதேனும் ஒன்று கிடைக்கும் யோகம் நிச்சயம் உண்டு.

சிம்மம்

சிம்மம் ராசிக்காரர்களுக்கு அதிகார தோரணை அதிகமாக இருக்கும். அதனால் இவர்களுக்கு அரசாங்கத்திற்கான யோகம் நிச்சயம் இருக்கிறது.

ஆனால் சிம்ம ராசிக்கிறார்கள் எப்போதும் போராடிக் கொண்டே இருப்பது போலவே தோன்றும்.

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்கள் கடின உழைப்பாளிகள். அதனால் இவரகளிடத்தில் எப்போதும் உழைக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கும்.

ஆனால் இவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு கிடைக்கும் யோகம் ஒரு முறை மட்டுமே உள்ளது என்பதால், கவனமுடன் அந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

மகரம்

மகரம் ராசிக்காரர்கள் எதையும் மிக எளிதாக கிரகித்துக் கொள்ளக் கூடியவர்கள். இவர்கள் தனக்கான பாதையை தேர்ந்தெடுப்பதில் மிகவும் வல்லவர்கள்.

இவர்களுக்கு சுற்றுச்சூழல் தொடர்பாகவும்,இயற்கை தொடர்பாகவும் ஆர்வம் அதிகமாக இருக்கும். விடாமல் கொஞ்சம் முயற்சி செய்தால் அரசு வேலை யோகம் கிடைக்கும்.

மீனம்

மீனம் ராசிக்காரர்கள் கற்பனைத் திறன் மிக்கவர்கள். இவர்கள் முன் யோசனையுடன் செயல்படுவதில் மிகவும் சிறந்தவராக விளங்குவார்கள்.

ஆனால் இவர்களுக்கான சோம்பேறித்தனத்தை விட்டு தொடர்ச்சியாக முயற்சி செய்தால் இவர்களுக்கு அரசு வேலை யோகம் கண்டிப்பாக உண்டு.

குறிப்பு

மேல் கூறப்பட்டுள்ள அனைத்து ராசிகளையும் தவிர்த்து ரிஷபம், கடகம், கன்னி, துலாம், தனுசு, கும்பம் ஆகியோருக்கு அரசாங்க தொடர்பான வேலை கிடைக்கும் யோகம் குறைவு

Get real time updates directly on you device, subscribe now.

You might also like