இளமையிலேயே தொப்பை எட்டிப் பார்க்கிறதா? கவலை வேண்டாம்…இதோ அற்புத தீர்வு!

இன்றைய உணவு முறையில் ஏட்பட்டுள்ள மாற்றம் காரணமாக இளையோர் தொடக்கம் முதியோர் வரை தொப்பை போட்டு கொண்டே வருகின்றது.

தொப்பை போட தொடங்கும் போதே அதை கணக்கெடுக்காமல் விட்டுவிடுவார்கள், அப்படியே கொஞ்ச நாள் கழித்து பார்த்தால் அதுவே சுமையாக மாறியிருக்கும்.

இப் பிரச்சினைக்கு தீர்வு தரும் சில வலி முறைகள் இதோ..

  • நம்மில் சிலர் இனிப்பு பிரியர்கள் அவர்கள் உணவில் சர்க்கரை சேர்ப்பது வழக்கம். சர்க்கரையும் தொப்பை வளர ஒரு விதத்தில் காரணமாகவே உள்ளது. ஆகையால் சர்க்கரைக்கு பதிலாக சுத்தமான தேனை அருந்துவதன் மூலம் தொப்பை போடுவதை குறைத்து கொள்ளலாம்.
  • ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு எலுமிச்சை நன்கு பிழிந்து கலந்து கொண்டு பின் அதோடு மூண்டு பல் பூண்டை சேர்த்து பதினைந்து நிமிடம் ஊற விடவும். பின் பூண்டு பற்களை நீக்கிவிட்டு காலையில் வெறும் வயிற்றில் இந்த நீரை அருந்தினால் தொப்பை குறையும். இதை தினமும் அருந்தி வர சிறந்த பலனை பெறலாம்.
  • இஞ்சி சாரோடு நெல்லிக்காய் சேர்த்து காலையில் தினமும் வெரு வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும்.
  • ஒருகைப்பிடி அளவு கொள்ளை முதல் நாள் இரவே நீரில் ஊறவிட்டு, காலையில் ஊறிய கொள்ளை வேகவைத்து அந்நீரை குடுத்து வர விரைவில் தொப்பை குறையும்.

இக்குறிப்புகளில் ஒன்றை தினமும் செய்து வர சிறந்த பலனை விரைவில் பெறலாம்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like