2 இளம் விண்மீன்கள் அசுரத்தனமாக மோதி வெடித்து சிதறிய அற்புதம்

விண்மீன்கள் உருவாகும் பிராந்தியத்திலிருந்து பிரிந்த இரண்டு இளம் விண்மீன்களுக்கு இடையில் ஏற்பட்ட வியத்தகு மற்றும் வன்முறை மிகுந்த மோதல் நிகழ்வை விஞ்ஞானிகள் படம் பிடித்துள்ளனர்.

ஓரியன் விண்மீன் தொகுதியில் நடைபெற்றுள்ள இந்த வெடிப்பு சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்து, விண்வெளியில்தூசியையும். வாயுவையும் பெருமளவு பரப்பியுள்ளது.

10 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால், சூரியனில் ஏற்பட்டது போல அதிகளவு சக்தியை இந்த மோதல் உருவாக்கி இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அஸ்ரோபிசிக்கல் இதழில் இதன் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

மிகப்பெரிய முற்கால விண்மீன்கள் இறந்துபோகும் தருணங்களில் நிகழும் சூப்பர் நோவாக்களோடு விண்வெளியில் ஏற்படும் மாபெரும் வெடிப்புகள் தொடர்புடையவை.

விண்மீன்களின் ஆயுள் சுழற்சியில், இன்னொரு பக்கத்தில் வெடிப்பு நடைபெறுவதை விஞ்ஞானிகளின் புதிய புகைப்படம் காட்டுகிறது.

மிகப்பெரிய வாயு மேகங்கள், அவைகளுக்கு இடையிலான ஈர்ப்பு விசையால் இழுக்கப்பட்டு ஒன்றோடோன்று மோதுகிறபோது விண்மீன்கள் உருவாகின்றன.

பூமியிலிருந்து 1,500 ஒளி ஆண்டுகள் தொலைவில் ஓரியன் மூலக்கூறு மேகம் 1 (OMC-1) என்று அழைக்கப்படும் பிரதேசத்தில் இருந்து பல இளம் விண்மீன்கள் உருவாகின்றன.

இந்த தொடக்க நிலை விண்மீன்களை 500 ஆண்டுகளுக்கு முன்பு வரை அதிகரித்து கோண்டே வருகின்ற வேகத்துடன் ஈர்ப்பு விசை இழுத்துள்ளது.

அத்தகைய ஈர்ப்பு விசையால் அவை இரண்டும் உரசிக் கொண்டன அல்லது ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. இதனால் மிகவும் சக்திவாய்ந்த வெடிப்பு ஏற்பட்டு வினாடிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் விண்வெளியில் வாயுக்களையும், தூசிக் குப்பைகளை பரப்பியுள்ளது.

2009 ஆம் ஆண்டு இந்த வெடிப்பின் அளவு பற்றிய குறிப்பை ஆய்வாளர்கள் முதன்முதலாக கண்டனர்.

சிலியின் வட பகுதியில் அமைந்துள்ள அடகாமா நீண்ட மில்லிமீட்டர்/துணை மில்லிமீட்டர் வரிசையை (Alma) பயன்படுத்தி வானவியல் ஆய்வாளர்கள் உயர் பிரிதிறனில் இந்த வன்முறை மிக்க மோதலை பார்க்க முடிந்துள்ளது.

“முன்பு விண்மீன்கள் உருவாகும் அமைதியான இடமாக இருந்தது, பின்னர், எல்லா திசைகளிலும் பாயும் ராட்சத மின்னல் வீச்சுகளோடு ஜூலை 4 வாணவேடிக்கை காட்சியோடு அண்டத்தின் பதிப்பாக இருப்பதை நாம் காண்கிறோம்” என்று இந்த ஆய்வை வழிநடத்திய கோலராடோ பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜான் பால்லி கூறியுள்ளார்.

கடந்த கால இந்த வெடிப்பை ஏறக்குறைய ஒரு ஒளியாண்டு நீளமாக இருக்க செய்திருந்த இந்த மின்னல் வீச்சுக்களின் அமைப்பு பற்றிய புதிய விவரங்களை இந்த அணியினர் கண்டறிந்துள்ளனர்.

மாபெரும் வாயு ஒளித்தடத்திற்குள் இருக்கும் கார்பன் மோனாக்ஸைடு வாயு விநியோகத்தையும், உயர் வேக இயக்கத்தையும் இந்த அணியினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

விண்மீன்கள் உருவாகும் செயல்முறை பற்றிய அவர்களின் புரிதலுக்கு இது உதவலாம்.

அல்மாவால் (Alma) பார்க்கப்பட்ட குப்பைகளின் எச்சங்களை வைத்து, இது போன்ற வெடிப்புகள் குறுகிய காலமே நீடித்திருந்ததாக விஞ்ஞானிகள் எண்ணுகின்றனர்.

“அழிந்து வரும் விண்மீனின் மேற்பரப்பில் தோன்றும் நோவா போல விண்மீன்களின் வெடிப்புகளை முற்கால விண்மீன்களோடும் அல்லது மிகவும் பெரிய விண்மீன் இறந்துவிடும்போது, இன்னும் கண்கவர் சூப்பர் நோவாவோடும் மக்கள் இணைத்துப் பார்க்கின்றனர்” என்று பேராசிரியர் பால்லி தெரிவிக்கிறார்.

“விண்மீன்களின் ஆயுள் சுழற்சியில், விண்மீன் உருவாகும் இன்னொரு பக்கத்தில் தோன்றுகின்ற வெடிப்புகளில் புதிய பார்வைகளை அல்மா வழங்கியுள்ளது”.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like