பரமேஸ்வரன் சுதன்

10ஆவது ஆண்டு நினைவு நாள்

10ஆவது ஆண்டு நினைவு நாள்

கொழும்பு  மாளிகாவத்தையை  பிறப்பிடம் வசிப்பிடமாக  கொண்ட  பரமேஸ்வரன் சுதன்  அவர்களின் 10ஆவது ஆண்டு நினைவு நாள்

 

விண்மீன்கள் எட்டிப்பிடிக்க
என் தோள் ஏறி
வானைத்தொட வந்த
என் பாதியே

உன் தோழனாய்
உன்னோடு கதைபேச
தினமும் காத்திருக்கிறேன்
வாசல் படியிலே

வண்ணம் கொண்ட உலகில்
என் எண்ணங்களின் சாயங்கள்
வெறுமையாய் போய்  வருடங்கள் பல
கலையவில்லை உன் நினைவுகள்
மறையவில்லை  உன் பூ முகம்
சத்தமிட்டு சமரசமாய்
உரிமை கொண்டாட
நீயின்றித் தவிக்கின்றேன்

தந்தை என் கனவுகள் கேளாமலே
காற்றோடு கரைந்து விட்டாய்
மீண்டும்
என் மகனாய் வந்துவிடு
மறுஜென்மத்திலும்
குறும்பா  நீ தான்
எம் உலகம்….

Get real time updates directly on you device, subscribe now.

You might also like