Srilanka

இலங்கை செய்திகள்

விடுதலைப் புலிகளின் தலைவருக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் கேக் வெட்டிய மாணவர்கள்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 69 ஆவது பிறந்தநாள் நிகழ்வு இன்றைய தினம் (26-11-2023) கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றுகூடிய மாணவர்கள்...

அடக்குமுறை தீவிரமடையும் போது கிளர்ச்சியே ஏற்படும் : செல்வம் எம்.பி கண்டனம்

ஜனநாயக போராளிகள் கட்சியின் துணைத் தலைவர் நகுலேஷ் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டமைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கண்டனம் வெளியிட்டுள்ளார். மட்டக்களப்பிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரனின்...

சீரற்ற காலநிலையால் நால்வர் பரிதாப மரணம் : 662 பேர் இடம்பெயர்வு

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் கடந்த இரு நாள்களில் 198 குடும்பங்களைச் சேர்ந்த 662 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மண்சரிவால் ஏற்பட்டுள்ள மரணங்கள் அத்துடன், மண்சரிவு...

முல்லைத்தீவில் 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் : நீதிமன்றத்தின் உத்தரவு

முல்லைத்தீவில் 13 வயது சிறுமியான பாடசாலை மாணவியை வன்புணர்வுக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு தேவிபுரத்தில் வசிக்கும் சிறுமியே வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்டவராவார். குறித்த சிறுமியை காணவில்லை எனத் தெரிவித்து கடந்த...

வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் பரிதாபமாக மரணம்

மாவனெல்ல பிரதேசத்தில் வீட்டின் அருகே சைக்கிளில் விளையாடிக் கொண்டிருந்த 13 வயது சிறுவன் லொறி மோதி உயிரிழந்துள்ளார். தஸ்வத்தை ஊடாக உஸ்ஸாபிட்டிய உதுவான்கந்த வீதியில் தஸ்வத்த பாலத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சிறுவன் மரணம் நேற்று...

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் : குறைவடையும் உரத்தின் விலை!

சந்தையில் உரத்தின் விலை குறைவடைந்துள்ளது என தேசிய உரச் செயலகம் தெரிவித்துள்ளது. தேவையானளவு உரம், நாட்டில் காணப்படுவதாக தேசிய உரச் செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொக்குஹேவா தெரிவித்துள்ளார். இந்நிலையில், 10,000 மெட்ரிக் தொன் யூரியா உரம்,...

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் பொலிஸ் உத்தியோகத்தர் காணவில்லை!

சந்தேகநபரைத் துரத்திச் சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் காணாமல் போயுள்ளதாக ஜா- எல பொலிஸார் இன்றையதினம் (23-11-2023) தெரிவித்துள்ளனர். சந்தேகநபர் ஆற்றில் குதித்துத் தப்பிச் செல்ல முயன்ற போது அவரை துரத்திச் சென்ற நிலையில்...

சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் குறித்து பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்!

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் குறித்து பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளது. அவ்வகையில், 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின்...

இலங்கை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள கருத்து

சிவில் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக பலத்தை பயன்படுத்துவதை பார்க்கும்போது, இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக்கை தொடர்பில் அச்சம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இந்த சவாலான சூழலில், அரசு நிதானத்தை காட்டுவதும், ஒன்று கூடும் சுதந்திரம்,...

யாழ்ப்பாண மண்ணிலிருந்து சாதனை: நீதித்துறை வரலாற்றில் மிக இளவயது தமிழ் பெண் நீதிபதி

இலங்கை நீதித்துறை வரலாற்றில் மிக இளவயதில் நீதிபதியாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் தேர்வாகியுள்ளார். வரலாற்றில் மிக இளவயது தமிழ் பெண் நீதிபதியாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாதுரி நிரோசன் என்பவரே இவ்வாறு சாதனை...