பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் மகிந்த! சற்று முன்னர் வெளியானது தகவல்
பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
அதற்கான கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இந்தக் கடிதம் சற்றுமுன்னர் அனுப்பப்பட்டதாக அறியமுடிந்தது.
இதேவேளை, அமைச்சர்களான விதுர விக்ரமநாயக்க, சன்ன ஜயசுமன, ஆகியோரும் பதவி...
முகநூல் காதலால் நேர்ந்த விபரீதம்… இலங்கையில் சிறுமிகளுக்கு நேர்ந்த கதி
முகநூலில் அறிமுகமான காதலனை தேடி பெற்றோருக்கு தெரியாமல் கடந்த 5ம் திகதி இரவு ரக்வான பிரதேசத்தில் இருந்து மீகஹதென்ன பகுதிக்கு சென்ற இரண்டு சிறுமிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ரக்வானாவைச் சேர்ந்த 17 வயது...
மஹிந்தவுக்கு நெருக்கமான அமைச்சரை விரட்டியடித்த வைத்தியர் – பாராட்டும் மக்கள்
கொழும்பில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு சென்ற அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வெளியேற்றப்பட்டுள்ளார்.
இன்று காலை சிகிச்சை பெற அங்கு சென்றவரை மருத்துவர் சிகிச்சையளிக்க முடியாதென கூறி வெளியே அனுப்பியுள்ளார்.
தனியார் மருத்துவமனையின் பணியாற்றும் விசேட...
அவசரமாக கூடிய விசேட அமைச்சரவை கூட்டம்! எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானங்கள்
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து கலந்துரையாட விசேட அமைச்சரவை கூட்டத்திற்கு இன்று ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்த நிலையில்,இதன்போது பல முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்போது, சமகால அமைச்சரவையிலுள்ள அமைச்சர்கள் பதவி...
இன்றைய தினம் பொதுமக்களுக்கு ஆட்பதிவு திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!
இன்றைய தினம் (06) ஆட்பதிவு திணைக்களத்தில் பொது சேவைகள் இடம்பெறாது அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச உத்தியோகத்தர்களின் பல்வேறு தொழிற்சங்கங்கள் ஏற்பாடு செய்துள்ள போராட்டம் காரணமாக திணைக்களத்தின் உள்ளக ஊழியர்கள் கடமைக்கு...
இனி இவ்வளவுதான்; எரிபொருள் விநியோகம் குறித்து வெளியான அதிரடி அறிவிப்பு
எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்துவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி மோட்டார் சைக்கிள்களுக்கு 2,000 ரூபாவிற்கும், முச்சக்கரவண்டிகளுக்கு 3,000 ரூபாவிற்கும் மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.
மேலும் , கார்கள், வேன்கள் மற்றும் ஜீப் ரக...
நாளை வேலை நிறுத்த போராட்டம் தொடர்பில் வெளியான தகவல்
நாளை மே 6 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ள வேலைநிறுத்தத்திற்கு ஆதரவளிக்கப் போவதில்லை என அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தீர்மானித்துள்ளதாக அரச தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறுகிய அரசியல் ஆதாயங்களை...
கடவுச்சீட்டு விண்ணப்பங்களை ஏற்கும் செயற்பாடு இடைநிறுத்தம்
கணினி கட்டமைப்பில் மீண்டும் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக கடவுச்சீட்டு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் செயற்பாடு இன்று (5) தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் செயலிழப்பு...
கனடாவில் இருந்து சென்னை சென்ற புலம்பெயர் இலங்கை தமிழர் மர்மமான முறையில் மரணம்
கனடா வாழ் ஈழத்தமிழ் இளைஞர் ஒருவர் தனது தாயுடன் சென்னைக்கு சென்றிருந்த நிலையில், மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சென்னையிலுள்ள மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தில் வழிபாடு செய்வதற்காக கடந்த 13ம் திகதி சென்ற...
இலங்கை பொருளாதாரம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் அதிர்ச்சி கணிப்பு!
இலங்கையின் நடப்பு ஆண்டுக்கான (2022) பொருளாதார வளர்ச்சிக் கணிப்பை 2.6 வீதமாக சர்வதேச நாணய நிதியம் குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக் கணிப்பின் பிரகாரம் எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு 2.7...









