வங்கி ஊழியராக நடித்து பொதுமக்களிடம் பணம் மோசடி!

வங்கி ஊழியராக நடித்து பொதுமக்களை ஏமாற்றி பணம் மோசடி செய்தமை சம்பந்தமாக பெண்ணொருவரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.


சந்தேக நபரான பெண், பிலியந்தல பிரதேச வசிப்பிடமாக கொண்ட நிஷாடி தனுஷ்கா எனவும் அவருக்கு எதிராக கோட்டை, புதுக்கடை, மாளிகாகந்தை மற்றும் மொரட்டுவை நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுத்தமதந்திரிகே தோன நிஷாதி தனுஷ்கா

அடையாள அட்டை இலக்கம் – 827253464

விலாசம் – இலக்கம் 66, அளுபோகாவத்த, மடபாத்த, பிலியந்தல.

சந்தேக நபரான பெண் குறித்து தகவல் அறிந்தால், கீழ் காணும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறும் பொலிஸார் கேட்டுள்ளனர்.

கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் – 011-2673593

கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி – 011-2673571

கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவு -011-2673590.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like