திங்கள், நவம்பர் 9, 2026
Breaking
Srilanka

வவுனியா காப்பகம் ஒன்றில் இளம் யுவதி கழுத்தறுத்து தற்கொலை முயற்சி!

பகிர: Facebook WhatsApp X Telegram
வவுனியா காப்பகம் ஒன்றில் இளம் யுவதி கழுத்தறுத்து தற்கொலை முயற்சி!

வவுனியாவில் உள்ள காப்பகம் ஒன்றில் 18வயதுடைய யுவதி ஒருவர் தற்கொலை முயற்சி

வவுனியா குழுமாட்டுச்சந்தி கணேசபுரத்தில் அமைந்துள்ள காப்பகம் ஒன்றில் வசித்து வந்த யுவதி கழுத்தினை வெட்டி தற்கொலைக்கு முயன்ற நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த காப்பகத்தில் வசித்து வந்த 18வயதுடைய குறித்த பெண் கடந்த 28.08.2018 அன்று இரவு 9.00 மணியளவில் தனது கழுத்தினை அறுத்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டு இரவு 9.30மணியளவில் வவுனியா வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சைகளின் பின்னர் தற்போது வைத்தியசாலையின் விடுதி 2 இல் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்கொலைக்கான காரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்