திங்கள், நவம்பர் 9, 2026
Breaking
Srilanka

யாழில் மீண்டும் வாள் வெட்டு குழு அட்டகாசம்! மூவருக்கு ஏற்பட்ட நிலை

பகிர: Facebook WhatsApp X Telegram
யாழில் மீண்டும் வாள் வெட்டு குழு அட்டகாசம்! மூவருக்கு ஏற்பட்ட நிலை

யாழ். கல்வியங்காடு, ஆடியபாதம் வீதியில் ஆவா குழுவினரால் வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் வீடு, மோட்டார்சைக்கிள் உட்பட பல பொருட்களுக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆடியபாதம் வீதியில் உள்ள 2 வீடுகளுக்குள் இன்று அதிகாலை நுழைந்த ஆவா குழுவினர் வாள்களுடன் சென்று வீட்டிலிருந்த பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர். அத்துடன் வீட்டில் இருந்தவர்களையும் வாளால் வெட்டியுள்ளனர்.

இதில் வேலுப்பிள்ளை செல்வராசா (வயது 70), செல்வராசா சஜீபன் (வயது 25) மற்றும் பாலேந்திரன் சரோஜினிதேவி (வயது 61) ஆகிய மூவருமே படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்