வெள்ளி, நவம்பர் 20, 2026
Breaking
Srilanka

இலங்கையில் நடந்த சோகம்-தந்தை மற்றும் இரண்டு மகன்கள் ரயிலில் பாய்ந்து தற்கொலை

பகிர: Facebook WhatsApp X Telegram
சற்று முன்னர் யாழில் ரயில் விபத்து! பரிதாபமாக பலியான இரண்டு இளைஞர்கள்

பொலன்னறுவை – வெலிகந்த பிரதேசத்தில் தந்தையொருவர் தனது பிள்ளைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த அனைவரும், வெலிகந்த – போவத்தை பகுதியிலேயே ரயில் முன்னால் பாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.40 வயதான நபரும், அவரது 11 மற்றும் 5 வயதான மகன்களுமே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள் என தெரியவந்துள்ளது.

குறித்த நபரின் மூத்த மகன் கொழும்பில் வேலை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. குடும்ப பிரச்சினை ஒன்றின் காரணமாகவே அவர்கள் இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வெலிகந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்