வியாழன், நவம்பர் 5, 2026
Breaking
Srilanka

இன்றைய ராசிபலன் 20-09-2018

பகிர: Facebook WhatsApp X Telegram
இன்றைய ராசிபலன் 22-05-2018

மேஷம்: பிற்பகலுக்கு மேல் மனதில் உற்சாகம் ஏற்படும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். உறவினர்கள் வருகையும், அதனால் ஆதாயமும் உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். சக ஊழியர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் பிற்பகலுக்கு மேல் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும். லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் வழியில் ஆதாயம் ஏற்படக்கூடும்.

ரிஷபம்: வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படும் நாள். முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். மற்றவர்களால் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், பொறுமையைக் கடைப் பிடிக்கவும். உறவினர்கள் வகையில் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் சக ஊழியர்களால் பிரச்னை ஏற்படக்கூடும். பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். வியாபாரத்தில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது. கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது.

மிதுனம்: புதிய முயற்சியை காலையிலேயே தொடங்கிவிடுவது நல்லது. பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதையோ, முக்கிய முடிவு எடுப்பதையோ தவிர்க்கவும். உறவினர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.

கடகம்: மனதில் உற்சாகம் அதிகரிக்கும். தைரியமாக முடிவெடுப்பீர்கள். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். உறவினர்கள் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழ்நிலை ஏற்படும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சகோதரர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்வீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களால் ஏற்பட்ட மறைமுகத் தொல்லைகள் விலகும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விட கூடுதலாக இருக்கும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.

சிம்மம்: தெய்வபக்தி அதிகரிக்கும். சிலருக்கு குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டியிருக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களின் பணிகளில் உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நீண்டநாளாக எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.

கன்னி: அனுகூலமான நாள். ஆனால், உடல் நலனில் கவனம் தேவை. வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும். புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். உறவினர்கள் வருகையால் பரபரப்பாகவும் உற்சாகமாகவும் காணப்படுவீர்கள். அலுவலகத்தில் பணிகளில் கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் பிற்பகலுக்கு மேல் பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும். விற்பனை சுமாராகத்தான் இருக்கும். . அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைக் காலையிலேயே தொடங்குவது சாதகமாக முடியும்.

துலாம்: தொடங்கும் காரியம் அனுகூலமாக முடியும். மனதில் தைரியம் அதிகரிக்கும். உறவினர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்வீர்கள். தாய்மாமன் மூலம் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் கூடுதலாகக் கிடைக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.

விருச்சிகம்: உற்சாகமான நாள். தொட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். வாழ்க்கைத்துணை உறவுகளால் எதிர்பாராத செலவுகள் ஏற்படக் கூடும். முக்கிய விஷயத்தில் குடும்பப் பெரியவர்களின் ஆலோசனை அவசியம். அலுவலகத்தில் சக ஊழியர்களின் விஷயத்தில் தலையிடவேண்டாம். பணிகளில் கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சிறு சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கக்கூடும்.

தனுசு: எதிர்பாராத நல்ல வாய்ப்புகள் வந்து சேரும் நாள். தொடங்கும் காரியங்கள் சாதகமாக முடியும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் ஏற்படக்கூடும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவை எடுப்பதற்கு உகந்த நாள். கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சக வியாபாரிகளால் மறைமுகத் தொல்லை ஏற்படக்கூடும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகக்கூடும்.

மகரம்: எந்த முடிவையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. குடும்பத்தில் மற்றவர்களுடன் அனுசரித்துச் செல்லவும். கணவன் – மனைவிக்கிடையில் சிறு பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். உறவினர்களால் குடும்பத்தில் சிறு சங்கடம் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். பங்குதாரர்கள் உங்கள் முயற்சிகளுக்கு உதவியாக இருப்பார்கள். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

கும்பம்: உற்சாகமான நாள். புதிய முயற்சிகளைக் காலையிலேயே தொடங்கிவிடுவது நல்லது. பிற்பகலுக்கு மேல் எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தருவதுடன் செலவுகளையும் ஏற்படுத்தும். பிள்ளைகள் வழியில் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் அதனால் பாதிப்பு இருக்காது.அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் சக ஊழியர்களின் உதவியுடன் செய்து முடிப்பீர்கள். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருப்பது அவசியம்.

மீனம்: அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். மற்றவர்களுடன் அனுசரணையாக நடந்து கொள்வதன் மூலம் மனஸ்தாபம் ஏற்படாமல் தவிர்த்துவிடலாம். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர் மற்றும் நண்பர்களின் சந்திப்பு மனதுக்கு மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் அதிகாரிகளை அணுகும்போது பொறுமை அவசியம். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஆதாயம் பெறும் வாய்ப்பு உண்டு. உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்