புதன், நவம்பர் 4, 2026
Breaking
Srilanka

முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்கள் தொடர்பில் நாமல் வெளிப்படுத்திய செய்தி!

பகிர: Facebook WhatsApp X Telegram
புதிய பிரதமர் நியமிக்கப்பட்ட சட்ட விளக்கத்தை நாமல் வெளியிட்டுள்ளார்

பிரதமர் மஹிந்த – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலானபுதிய அரசாங்கம் முன்னாள் விடுதலை புலிகள் அமைப்பின் போராளிகளுக்கு புனர்வாழ்வழிப்பதுடன் அவர்களின் நிலையான வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த உதவிபுரியும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள கருத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷவின் கடந்த அரசாங்கத்தில் சுமார் 12 ஆயிரம் முன்னாள் விடுதலைப்புலிகளின் போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டதுடன், 3,000 க்கும் அதிகமானவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கம் சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளையும் புனர்வாழ்வளிக்கும் வகையில் செயற்படும் என கூறினார்.

மேலும் மீதமுள்ள அரசியல் கைதிகளுக்கும் அவர்களுக்கான நிலையான வாழ்வாதாரங்களைக் கண்டறிந்து இந்த அரசாங்கம் செயற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்