அரசுடன் இணைந்தார் கூட்டமைப்பு எம்.பி வியாழேந்திரன்: பிரதியமைச்சராக பதவிப்பிரமாணம்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் இன்று அரசுடன் இணைந்து பிரதி அமைச்சராக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

கிழக்கு மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சராக சற்று முன்னர் அவர் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்து தாவி வந்த எஸ்.பி. நாவின்ன கலாச்சார அலுவல்கள், உள்நாட்டு அலுவல்கள் மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.