புதன், நவம்பர் 4, 2026
Breaking
Srilanka

யாழில் போலி குடிநீர்ப் போத்தல் விற்றவர்கள் பிடிபட்டனர் – 6 ஆயிரம் போத்தல்கள் பறிமுதல்!

பகிர: Facebook WhatsApp X Telegram
யாழில் போலி குடிநீர்ப் போத்தல் விற்றவர்கள் பிடிபட்டனர் – 6 ஆயிரம் போத்தல்கள் பறிமுதல்!

யாழ்ப்பாணக் குடாநாட்டில் போலி லேபல் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வந்த 6 ஆயிரம் குடிநீர்ப் போத்தல்களை யாழ்ப்பாணம் மாநகர சபையின் சுகாதாரப் பிரிவினர் திடீர் சோதனை மேற்கொண்டு அள்ளிச் சென்று நீதிமன்றில் முற்படுத்தினர்.

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் இயங்கிய விநியோக வர்த்தக நிலையத்மின் மீது நேற்றுக்காலை சுகாதார உத்தியோகத்தர்கள் அதிரடி சோதனை நடாத்தினர்.

இதன்போது குடிநீர்ப்போத்தலில் நிறுவன பதிவு இலக்கம் இன்றித் தயார் செய்யப்பட்ட நிலையில் ஓர் இலக்கமும் அதன் மேலே மற்றுமோர் போலி இலக்கமும் ஒட்டப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இவ்வாறு விற்பனைக்கு தயார் நிலையில் இருந்த 6 ஆயிரம் குடிநீர்ப் போத்தல்களை சுகாதார உத்தியோகத்தர்கள் கைப்பற்றி அவற்றினை உடனடியாகவே யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தினர்.

குறித்த குடிநீர் போத்தலில் மத்திய சுகாதார அமைச்சின் அனுமதிப் பதிவு இலக்கம் என தனியான ஓர் சிறிய ஸ்ரிக்கர் அச்சிடப்பட்டே ஓட்டியுள்ளதாக பொதுச் சுகாதார உத்தியோகத்தர் மன்றின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தார்.

மேற்படி வழக்கினை ஆராய்ந்த நீதிபதி சதீஸ்கரன் குறித்த வழக்கில் மாவட்ட விநியோகஸ்தரோடு பிரதான சந்தேக நபரிற்கு அழைப்பானை அனுப்புமாறும் அதுவரை சான்றுப்பொருட்கனை மன்றில் தடுத்துவைத்ததோடு மாவட்ட விநியோகஸ்தரான 2ம் எதிரியை 40 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதித்து குறித்த வழக்கினை டிசம்பர் 7ம் திகதிக்கு வழக்கினை ஒத்திவைத்தார்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்