புதன், நவம்பர் 4, 2026
Breaking
Srilanka

நாடாளுமன்ற கலைப்பின் பின்னணியில் முக்கிய புள்ளிகள் மூவர்? வெளிவரும் திடுக்கிடும் உண்மைகள்

பகிர: Facebook WhatsApp X Telegram
நாடாளுமன்றத்தில் அடிதடி – பதற்றமான சூழல்

இலங்கையில் நாடாளுமன்றத்தைக் கலைக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சதித் திட்டத்துக்கு, கர்தினால் மல்கம் ரஞ்சித், நீதியரசர் சரத் என் சில்வா, தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மகிந்த தேசப்பிரிய ஆகியோர் துணையாக இருந்தனர் என்று கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 9ஆம் திகதி, நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அரசிதழ் அறிவிப்பு வரையப்பட்டு, அதில் மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்ட போது, அதிபர் செயலகத்தில், கத்தோலிக்கத் திருச்சபையின் கர்தினால் மல்கம் ரஞ்சித்தும், இருந்துள்ளார்.

இந்தச் திட்டத்துக்கு முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என் சில்வா துணையாக இருந்தார்.

அத்துடன், தேர்தல் நாள் தொடர்பான கணிப்புகளைச் செய்வதற்காக, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவும் அழைக்கப்பட்டிருந்தார் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்