இலங்கையில் தொடரும் நெருக்கடி! ரூபாய் பெறுமதிக்கு ஏற்பட்டுள்ள நிலை

அமெரிக்க டொலரின் விலை வேகமாக அதிகரித்து வருவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று வீதங்களின் அடிப்படையில் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 181 ரூபாய் 94 சதங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 177 ரூபாய் 99 சதங்கள்.

வெளிநாட்டு நாணயங்கள் – கொள்முதல் – விற்பனை விலைகள் பின்வருமாறு,

அவுஸ்ரேலிய டொலர் – 127.28 – 132.72

கனேடிய டொலர் – 133.34 – 138.35

சைனீஸ் யுவான் – 25.32 – 26.53

யூரோ – 200.41 – 207.57

ஜப்பான் யென் – 1.5591 – 1.6168

சிங்கப்பூர் டொலர் – 128.82 – 133.25

ஸ்ரேலிங்க் பவுண் – 226.94 – 234.39

சுவிஸ் பிராங்க் – 177.00 – 183.69

யு.எஸ். டொலர் – 177.99 – 181.94