வெள்ளி, நவம்பர் 20, 2026
Breaking
Srilanka

ஆட்டம் போடாதே கருணா! அடக்கி விடுவேன்! பொன்சேகா எச்சரிக்கை

பகிர: Facebook WhatsApp X Telegram
தமிழர்களுக்கு மீண்டும் துரோகம் செய்த கருணா!

முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எச்சரித்துள்ளார்.

நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தாத வகையில் கருணா அமைதியாக இருக்க வேண்டும். நான் பீல்ட் மார்ஷல் என்பதை மறந்து விட வேண்டாம் என பொன்சேகா எச்சரித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியினால் தனக்கு உயிர் அச்சுறுத்தல் விடுவதாகவும், தான் யார் என்பது தெரியாமல் விளையாடுவதாக கருணா கருத்து வெளியிட்டிருந்தார்.

கருணா தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த தகவலை நேற்று வெளியிட்டிருந்தார். இந்நிலையில் மட்டக்களப்பில் பணியில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸார் நேற்று மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.

இந்த மரணத்தின் பின்னணியில் கருணா இருப்பதாக இன்று நாடாளுமன்றதில் வைத்து, நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் கருணாவை கடுமையாக எச்சரிக்கும் வகையில் பொன்சேகா கருத்து வெளியிட்டுள்ளார்

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்