வெள்ளி, நவம்பர் 20, 2026
Breaking
Srilanka

எல்லாம் கட்டுக்கதையே – திடீர் குத்துக்கரணம் அடித்த மைத்திரி

பகிர: Facebook WhatsApp X Telegram
நான் பின்வாங்க மாட்டேன் ; கொட்டும் மழைக்கு மத்தியிலும் ஜனாதிபதி விடுத்த சூளுரை !

ராஜபக்சவினரால் தனது உயிருக்கு ஆபத்து இருந்தது என்று தேர்தல் மேடையைக் கவருவதற்காக, கூறிய கட்டுக்கதையே என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு வாரஇதழ் ஒன்றுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று செவ்வி ஒன்றை அளித்திருந்தார்.

அதில், உங்களின் உயிருக்கு ஆபத்து இருந்ததாக நீங்கள் திரும்பத் திரும்ப கூறி வந்தீர்கள். அப்படியிருக்கும் போது, எந்த நம்பிக்கையின் அடிப்படையில் மஹிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தீர்கள் என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மைத்திரிபால சிறிசேன,

“அவையெல்லாம், அரசியல் மேடைகளில் குற்றம்சாட்டப்பட்ட வெறும் அரசியல் பேச்சுக்கள். ஆனால், அண்மையது, என்னைக் கொல்வதற்கான தெளிவான திட்டம்.” என்று பதிலளித்தார்.

அப்படியானால், ராஜபக்ச தேர்தலில் வென்றிருந்தால், நீங்களும் உங்களின் குடும்பமும், ஆறு அடி நிலத்துக்குள் புதைக்கப்பட்டிருப்போம் என்று தெளிவாக கூறியிருந்தீர்களே என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், ”மஹிந்த ராஜபக்ச என்னைப் படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டினார் என்று எந்த தகவலும் இல்லை. அவை வெறுமனே, தேர்தல் மேடைகளில், அங்கிருப்பவர்களைக் கவருவதற்காக கூறியவை தான்” என்று பதிலளித்துள்ளார்.

அத்துடன் இந்தப் பதிலைக் கூறி விட்டு, செவ்வி கண்ட ஊடகவியலாளரைப் பார்த்து நக்கலாக சிரித்திருந்தார்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்