சனி, நவம்பர் 21, 2026
Breaking
Srilanka

சரத்பொன்சேகாவிற்கு அமைச்சரவையில் இடமில்லை- ஏன்?

பகிர: Facebook WhatsApp X Telegram
புலிகளின் குடும்பத்தினருக்கு நஷ்டஈடா? பொன்சேகா போர்க்கொடி

முன்னாள் இராணுவ தளபதி சரத்பொன்சேகாவிற்கு அமைச்சு பதவியை வழங்குவதற்கு பிடிவாதமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மறுத்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று பதவியேற்றுள்ள புதிய அமைச்சரவையில் சரத்பொன்சேகா இடம்பெறாத நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது

ஐக்கியதேசிய கட்சியினர் பலதடவைகள் வேண்டுகோள் விடுத்தபோதிலும் சிறிசேன சரத்பொன்சேகாவை நியமிக்க மறுத்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசியல் நெருக்கடி ஆரம்பமானதன் பின்னர் சரத்பொன்சேகா தனது நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்தார் என்பதை காரணம் காட்டி சிறிசேன சரத்பொன்சேகாவை அமைச்சராக நியமிக்க மறுக்கின்றார் என தகவல்கள் வெளியாகியுள்ளன

ஜனாதிபதியிடம் ஐக்கிய தேசிய முன்னணி சமர்ப்பித்துள்ள அமைச்சர்கள் பட்டியலில் சரத்பொன்சேகாவின் பெயரும் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

இந்நிலையிலேயே சிறிசேன அதனை நிராகரித்துள்ளார்

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்