சனி, நவம்பர் 21, 2026
Breaking
Srilanka

குடும்ப பெண்ணை அச்சுறுத்தி 25000 ரூபாய் இலஞ்சம் பெற்ற கிராமசேவகர்

பகிர: Facebook WhatsApp X Telegram
பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி – கிராம அலுவலர்கள் இன்று பணிபுறக்கணிப்பு!!

இழப்பீட்டு நிவாரணமாக வழங்கப்பட்ட 1 லட்சம் ரூபாயில் 25000 ரூபாயை தனக்கு வழங்கவேண் டும் என கூறி குடும்ப பெண்ணை மிரட்டி இலஞ்சம் பெற்ற கிராமசேவகர் சிக்கலில் மாட்டியுள்ளது டன் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்

சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள கிராமசேவகர் ஒருவரே இவ்வாறு இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் யாழ்.மாவட்ட செயலாளர் என்.வேதநாயகனின் கடுமையான நடவடிக் கைகளில் சிக்கி தற்காலிகமாக வேலையையும் இழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

இழப்பீட்டு நிவாரணமாக ஒரு இலட்சம் ரூபா வழங்கப்படும், திட்டமொன்றில் பெண் தலைமைத்துவ குடும்பமொன்றை இணைப்பதென்றால், இழப்பீட்டு தொகையில் 25,000 ரூபாவை தனக்கு இலஞ்சமாக தர வேண்டுமென கிராம அலுவலர் தெரிவித்துள்ளார்.

குடும்ப தலைவியும் அதற்கு சம்மதித்தார். எனினும், 15,000 ரூபாவையே அந்த பெண் வழங்கினார். “பேச்சு பேச்சாக இருக்க வேண்டும்“ என கண்டிப்பாக கூறிய கிராமசேவகர், மீதி 10,000 கேட்டு நச்சரித்துள்ளார். வேறு வழியின்றி குடும்ப தலைவி அதையும் வழங்கினார்.

தனக்கு நேர்ந்த சம்பவத்தை இரகசிய கடிதமாக எழுதி, மாவட்ட செயலாளரிற்கு அனுப்பினர் அந்த பெண். தனது அலுவலர்களை அனுப்பி விடயம் தொடர்பில் விசாரணை நடத்தினார் மாவட்ட செயலாளர்.

பின்னர், குறிப்பிட்ட பெண்ணை மாவட்ட செயலகத்திற்கு அழைத்து விடயத்தை ஆராய்ந்தார். உரிய ஆதாரங்களை திரட்டி, நிர்வாக ஒழுக்காற்று நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதன் இறுதி முடிவு கிட்டும் வரை,

இலஞ்சம் வாங்கிய கிராம அலுவலரை தற்காலிகமாக பணநீக்குமாறு நேற்று எழுத்துமூலம் உத்தரவிட்டுள்ளார் மாவட்ட செயலாளர்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்