சனி, நவம்பர் 21, 2026
Breaking
Srilanka

ரணிலின் கைக்கூலி சுமந்திரனுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி!

பகிர: Facebook WhatsApp X Telegram
மஹிந்தவின் பதவிக்கு ஆபத்தாக மாறிய சுமந்திரன்!

இலங்கையின் சமகால அரசாங்கத்தில் முக்கிய அமைச்சு பதவியை பெற்றுக்கொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி பிரபலத்தினால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய வடக்கு அபிவிருத்தி மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு பதவியை பொறுப்பேற்குமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் அந்தக் கோரிக்கையை சுமந்திரன் நிராகரித்துள்ளார். எனினும் தனது ஆலோசனைக்கமைய தனது செயலாளர் மூலம் அமைச்சின் வேலைகளை செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அமைச்சு பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு டக்ளஸ் தேவானந்தாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் அவர் அதனை நிராகரித்துள்ளார்.

தான் அமைச்சு பதவியை ஏற்றுக் கொண்டால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அவசியத்திற்கமைய செயற்பட நேரிடும் என டக்ளஸ் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்