சனி, நவம்பர் 21, 2026
Breaking
Srilanka

ஆபத்தான கட்டத்தை நோக்கிச் செல்லும் ஜனாதிபதியின் அதிரடித் தீர்மானம்….!!

பகிர: Facebook WhatsApp X Telegram
என்னை கொலை செய்யும் கும்பலில் பொன்சேகா உட்பட பலர் உள்ளனர்! ஜனாதிபதி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அதிரடி தீர்மானம் ஆபத்தான கட்டத்தை அடையவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று எச்சரித்துள்ளது.பாதுகாப்பு அமைச்சின் கீழ் பொலிஸ் திணைக்களத்தை இணைத்துள்ளமையின் மூலம் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் கீழ் பொலிஸ் திணைக்களத்தை வைத்து கொள்வதற்கு ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானம் 2013ஆம் ஆண்டிற்கு முன்னர் காணப்பட்ட ராஜபக்ச ஆட்சியை நோக்கி மீண்டும் நாட்டை கொண்டு செல்லும் முயற்சியாக உள்ளதென குறிப்பிடப்பட்டுள்ளது.1991ஆம் ஆண்டு பொதுநலவாய நாடுகள் இணக்கம் வெளியிட்ட ஹராரோ ஒப்பந்தத்தில் உள்ள நல்லாட்சி கொள்கையை, மீறும் வகையிலும், மனித உரிமை பாதுகாப்பிற்கு எதிராக செயற்படும் வகையிலும் ஜனாதிபதியின் தீர்மானம் உள்ளதென குறிப்பிடப்படுகின்றது.

2013ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 16ஆம் திகதி சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் கீழ் பொலிஸ் திணைக்களம் நியமிக்கப்பட்டது.எனினும், பின்னர் அந்த அமைச்சு, மனித உரிமை பாதுகாப்பு தொடர்பிலான சிறந்த பாடம் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய அமைக்கப்பட்டது.

எப்படியிருப்பினும், தற்போதைய ஜனாதிபதி அந்த நடவடிக்கையினை பின்நோக்கி கொண்டு சென்று பாதுகாப்பு அமைச்சின் கீழ் பொலிஸ் திணைக்களத்தை வைத்து கொள்வதற்கு தீர்மானித்துள்ளார்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்