ஞாயிறு, நவம்பர் 15, 2026
Breaking
Srilanka

யாழ்ப்பாணம் நோக்கி சென்ற வாகனம் விபத்து! பரிதாபமாக பலியான நபர்

பகிர: Facebook WhatsApp X Telegram
யாழ்ப்பாணம் நோக்கி சென்ற வாகனம் விபத்து! பரிதாபமாக பலியான நபர்

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் நபர் ஒருவர் பரிதாபமாக பலியாகி உள்ளார்.

இன்று அதிகாலை 3.30 மணியளவில் பளைப் பகுதியில் விபத்து ஏற்பட்டுள்ளது.

அந்தப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்துடன் கொழும்பில் இருந்து சென்ற ஹையேஸ் ரக வான் மோதுண்டமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

கொழும்பில் புதிதாக கொள்வனவு செய்து செலுத்தி செல்லப்பட்ட ஹையேஸ்ரக வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளது.

சம்பவத்தில் ஹையேஸ் வானை செலுத்தி வந்த மீசாலை மேற்கை சேர்ந்த பஸ் சாரதி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்