சனி, நவம்பர் 21, 2026
Breaking
Srilanka

யாழில் வழிப்பறி கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய இருவர் கைது!

பகிர: Facebook WhatsApp X Telegram
யாழில் வழிப்பறி கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய இருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்று வந்த வழிப்பறி உள்ளிட்ட நகைக் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவருக்கு எதிராக 11 வழக்குகளை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் தாக்கல் செய்துள்ளனர்.

அத்தனை வழக்குகளிலும் சந்தேகநபரை அடையாள அணிவகுப்புக்குட்படுத்த உத்தரவிட்ட யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன், அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் அவரிடமிருந்து நகைகளைக் கொள்வனவு செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நகைக் கடை உரிமையாளரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டது.

யாழ்ப்பாணக் குடாநாட்டின் பல இடங்களிலும் அண்மைய நாள்களில் வழிப்பறிகளும் நகைக் கொள்ளைகளும் இடம்பெற்று வந்தன. இந்தச் சம்பவங்கள் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பபு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்திருந்தனர்.

இந்நிலையில் நகைக் கொள்ளைகளுடன் தொடர்புடைய ஒருவரையும் அந்த நகைகளை உருக்கிக் கொடுக்கின்ற ஒருவரையும் நேற்று பொலிஸார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றும் களவாடப்பட்ட – கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் என சந்தேகிக்கப்படும் சுமார் 8 இலட்சம் ரூபா பெறுமதியான பதினைந்து பவுண் நகைகளும் மீட்கப்பட்டன.

விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் இருவரையும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் நேற்று முற்படுத்தினர். 11 கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் தனித் தனியே வழக்குகளை பொலிஸார் தாக்கல் செய்திருந்தனர்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்