சனி, நவம்பர் 21, 2026
Breaking
Srilanka

கல்முனையை சோகத்தில் ஆழ்த்திய இளைஞனின் இறுதி அஞ்சலி நாளை!

பகிர: Facebook WhatsApp X Telegram
கல்முனையை சோகத்தில் ஆழ்த்திய இளைஞனின் இறுதி அஞ்சலி நாளை!

அகால மரணமடைந்த பாண்டிருப்பைச் சேர்ந்த இளைஞன் தனுஷின் இறுதி நல்லடக்கம் நாளை பி.ப 3.30 மணியளவில் நடைபெறவுள்ளது.

தற்கொலை செய்துகொண்ட தனுஷின் உடல் இன்று (28) மீட்டெடுக்கப்பட்டு மட்டகக்ளப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளது.

நாளை காலை உறவினர்களிடம் உடல் கையளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாண்டிருப்பு திருவள்ளுவர் வீதியில் உள்ள அன்னாரது இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பாண்டிருப்பு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

அனைவருடனும் அன்பாகவும் பண்பாகவும் பழகும் தனுஷின் இந்த எதிர்பாராத இழப்பு அவரின் நண்பர்கள், உறவினர்கள், மட்டுமின்றி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது கல்முனை பிராந்தியமே சோகமயமாக உள்ளது.

சிறந்த சமூக சேவையாளனாகவும், சிறந்த செயற்பாட்டாளராகவும் தனுஷ் விளங்கியதுடன், பல பொது அமைப்புக்களில் முக்கிய பொறுப்புக்களில் இருந்து சமூக சேவையிலும் சிறப்பாக முனைப்புடன் செயற்பட்ட தனுஷின் இழப்பு இலகுவில் ஏற்றுக்ககொள்ள முடியாத ஒர் இழப்பாகவே உள்ளது.

பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதையம்மன் மாணிக்கப்பிள்ளையார் ஆலயங்களின் இந்து இளைஞர் மன்ற செயலாளரும் கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனையின் முக்கிய உறுப்பினரும் பாண்டிருப்பு யூத் விளையாட்டுக்கழகத்தின் செயலாளர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

கல்முனை நெற் ஊடக வலையமைப்பு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொகள்கிறது

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்