நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள கொழும்பு – காங்கேசன்துறைக்கிடையிலான உத்தரதேவி புகையிரத சேவையின் பயணக் கட்டணத்தை புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி முதலாம் வகுப்பு (AC) கட்டணமாக ரூபாய் 1700/=, இரண்டாம் வகுப்பு கட்டணமாக 850/= ரூபாவும், மூன்றாம் வகுப்பு கட்டணமாக 600/= ரூபாவும் அறவிடப்படவுள்ளது.
நாளை முற்பகல் கொழும்பு கோட்டையிலிருந்து- யாழ்ப்பாணம் 11.50 மணிக்கும், யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு காலை 6.10 மணிக்கும் புறப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.






