அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாய் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

இலங்கை ரூபாய்க்கான அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதி அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 178.83 ரூபாயாக பதிவாகியுள்ளது.

அத்துடன், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 174.98 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி அண்மைய காலமாக தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வந்த நிலையில், இன்று அதிகரிப்பை பதிவாகியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.