இலங்கையின் 71வது சுதந்திரதின கொண்டாட்டங்கள் இன்று காலை காலி முகத்திடலில் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்ட மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி பற்றிய செய்திகளே, தற்போது சிங்கள சமூக ஊடகங்களில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.
அசாத் சாலி தனது மனைவிகளான பாத்திமா சியாதா, ரஷ்னா ஆகியோருடனும் தனது இளைய புதல்வனுடனும் சுதந்திரதின நிகழ்வில் கலந்து கொண்டார்.
இரண்டு மனைவிகளுடன், விசேட விருந்தினர் ஒருவர் இலங்கை சுதந்திரதின நிகழ்வில் கலந்துகொண்ட முதல் சந்தர்ப்பம் இதுவென சமூக ஊடகங்களில் குறிப்பிடப்பட்டு வருகிறது.






