புதன், நவம்பர் 4, 2026
Breaking
Srilanka

யாழில் பட்டப்பகலில் நடந்த பயங்கரம்! முகமூடி கும்பல் அட்டகாசம்

பகிர: Facebook WhatsApp X Telegram
யாழில் பட்டப்பகலில் நடந்த பயங்கரம்! முகமூடி கும்பல் அட்டகாசம்

யாழ்ப்பாணத்தில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

யாழ். நல்லூர் நாயன்மார்கட்டு, நாயன்மார் வீதியில் உள்ள வீடொன்றின் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

முகங்களை மூடிக் கட்டியவாறு வாள்களுடன் வந்த 6 பேர் கொண்ட குழுவினர் குறித்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இதனால் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹையஸ் வாகனம் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், வீட்டில் இருந்த மூன்று மோட்டார் சைக்கிள்களும், வீட்டுக் கண்ணாடிகளும் உடைத்து நொருக்கப்பட்டுள்ளன.

வீட்டின் கேற் பூட்டப்பட்டிருந்த போதும், மதிலால் வீட்டுக்குள் ஏறிப் பாய்ந்து உள்சென்ற குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்