புதன், நவம்பர் 4, 2026
Breaking
Srilanka

சாவகச்சேரியில் மயங்கி விழுந்த முதியவர் உயிரிழப்பு!

பகிர: Facebook WhatsApp X Telegram
சாவகச்சேரியில் மயங்கி விழுந்த முதியவர் உயிரிழப்பு!

மயங்கி வீழ்ந்த குடும்பஸ்தர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் அல்லாரை வடக்கில் நடந்துள்ளது.

நெஞ்சு வலிப்பதாகக் கூறி மயங்கி வீழந்த நபரை வாகனத்தில் ஏற்றி சாவகச்சேரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர் ஏற்கனவே அவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்தனர்.

விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சாவகச்சேரி நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்தனர்.

அறிக்கையினைப் பார்வையிட்ட நீதிவான் பிரதேச திடீர் இறப்பு விசாரணை அதிகாரி மூலம் விசாரணைகளை நடாத்தி நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார்.

இறப்பு விசாரணைகளை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி மூலம் மேற்கொண்டு, மருத்துவமனை சட்ட மருத்துவ அதிகாரி மூலம் உடற் கூற்றுப் பரிசோதனை நடாத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறும் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலத்தை உறவினரிடம் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்