புதன், நவம்பர் 4, 2026
Breaking
Srilanka

யாழில் நடக்கும் கொடுமை..சொத்துக்காக மன நலம் பாதிக்கப்பட்டவரை அடித்து சித்தரவதை செய்யும் உறவினர்கள்!

பகிர: Facebook WhatsApp X Telegram
யாழில் நடக்கும் கொடுமை..சொத்துக்காக மன நலம் பாதிக்கப்பட்டவரை அடித்து சித்தரவதை செய்யும் உறவினர்கள்!

யாழ்.பருத்துறை பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட வயோதிபா் ஒருவருடைய சொத்தை அபகாிப்பதற்காக குறித்த வயோதிபா் தொடா்ச்சியாக சித்தரவதைக்கு உள்ளாகி வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனா்.

சொத்து ஆசையில் நடக்கும் இச்சித்திரவதையால் ஒருநாள் மனநலம் குன்றியவரின் உயிர் பிரியும் அபாயம் ஏற்ப்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவித்தனர்.

யாழ்.பருத்தித்துறை சாரையடி வீரபத்திரர் கோவிலடியைச் சேர்ந்த மனநலம் குண்ரியவரின் பெயர் பெயர் கந்தசாமி லிங்கேஸ்வரன். இவர் பிறப்பிலிருந்தே மனநலன் குன்றியவர். இவர் தனது தாய் தந்தையரின் மறைவுக்குப் பின்னர் தாயின் சகோதரியின் பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றார்.

இவருக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளதுடன் இவரை இவரது பாதுகாவலர்களான சகோதரியின் உறவுகள் மிகக் கேவலமான முறையில் பராமரித்த வருவதாக அறியவருகின்றது.

இது தொடர்பாக குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த பெண் கிராமசேவகருக்கு அறிவித்தும் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என அப்பகுதியைச் சேர்ந்த நலன் விரும்பிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அப்பகுதி கிராமசேவகரைத் தொடர்பு கொள்ள முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை. இது தொடர்பாக உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி பொதுமக்கள் மிகவும் தாழ்மையுடன் குறித்த பிரிவுகளுக்கான அதிகாரிகளைக் கேட்டுள்ளனர்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்