புதன், நவம்பர் 4, 2026
Breaking
Srilanka

பாடசாலையில் தேன்கூடு -அகற்ற வசதியில்லையென கைவிரித்த அனர்த்த முகாமைத்துவப்பிரிவு!

பகிர: Facebook WhatsApp X Telegram
பாடசாலையில் தேன்கூடு -அகற்ற வசதியில்லையென கைவிரித்த அனர்த்த முகாமைத்துவப்பிரிவு!

வவுனியா சாளம்பைக்குளம் அல் அக் ஷா மகாவித்தியாலயத்தில் தேன் கூடு காணப்பட்ட நிலையில் அதனை அகற்றுவதற்காக இன்று பாடசாலைக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா சாளம்பைக்குளம் பகுதியிலுள்ள அல் அக் ஷா மகாவித்தியாலயத்தில் இன்று காணப்பட்ட தேன்கூடு காரணமாக பாடசாலையிலுள்ள மாணவர்களுக்கு ஆபத்து ஏற்படவாய்ப்புக்கள் காணப்படுவதாக பாடசாலை அதிபர் வவுனியா தெற்கு கல்வி வலயப்பணிப்பாளரின் கவனத்துக்குக் கொண்டு சென்றார்.

இதையடுத்து இன்றைய தினம் பாடசாலைக்கு விடுமுறை வழங்கி தேன்கூட்டை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிபருக்கு கல்வி வலயப்பணிப்பாளரினால் ஆலோசனை வழங்கப்பட்டதுடன் இன்றைய விடுமுறை தினத்தை வேறு ஒரு தினத்தில் பாடசாலை நடாத்துமாறு தெரிவிக்கப்பட்டதையடுத்து இன்று காலை மாணவர்கள் பாடசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டதுடன் பூவரசங்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிசார் மேலதிக நடவடிக்கைக்காக அதிபர் ஊடாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப்பிரிவின் கவனத்துக்குக் கொண்டு சென்றபோது தற்போது தேனீயை அகற்றுவதற்கு அனர்த்த முகாமைத்துவப்பிரிவுக்கு வசதிகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டு வெளியிலிருந்து உதவி பெற்றுக்கொள்வதற்கு பாடசாலை அதற்குரிய பணம் செலுத்தவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பாடசாலையிலிருந்து தேனீயை அகற்றுவதற்குரிய நடவடிக்கையை பாடசாலை நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்