புதன், நவம்பர் 4, 2026
Breaking
Srilanka

இலங்கையில் அறிமுகமாகும் புதிய நடைமுறை!

பகிர: Facebook WhatsApp X Telegram
வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் மீண்டும் குழப்பம்…!! பொலிஸார் பாதுகாப்பு கடமையில்..!!

இலங்கையில் பெண்களுக்கென வெகு விரைவில் தனியான பஸ் சேவை ஆரம்பிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் மேற்பார்வை எம்.பி ஹிருனிக்கா பிரேமச்சந்திர நேற்று பாராளுமன்றத்தில் இதனை தெரிவித்தார்.

ரயில்களில் பெண்களுக்கென தனித்துவமான ரயில் பெட்டிகள் ஒதுக்கப்பட்டதற்கு பெண்களிடமிருந்து பெரும் வரவேற்பு கிடைத்திருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பெண்களுக்கென தனியான பஸ் சேவையை ஆரம்பிப்பதற்கு போக்குவரத்து அமைச்சர் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு, துறைமுகங்கள், கப்பல்துறை அலுவல்கள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான விவாதத்தில் அமைச்சர் ஹிருனிக்கா நேற்று உரையாற்றினார்.

இதன்போது அவரை குறுக்கிட்ட கனக ஹேரத் எம்.பி பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட ரயில் பெட்டிகள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட வில்லையென்றும் அத்திட்டம் படு தோல்வி கண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

அதற்குப் பதிலளித்த போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, பெண்கள் தினத்தையிட்டு அதன் முதற்கட்டமே ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் இச்சேவை தொடர்ந்து அமுல்படுத்தப்படுமென்றும் தெரிவித்தார்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்