புதன், நவம்பர் 4, 2026
Breaking
Srilanka

நாடு முழுவதும் 9ஆம் திகதி ஏற்பட உள்ள நெருக்கடி

பகிர: Facebook WhatsApp X Telegram
நாடு முழுவதும் 9ஆம் திகதி ஏற்பட உள்ள நெருக்கடி

எதிர்வரும் 9ஆம் திகதி நாடு முழுவதும் ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் பிரதான அமைப்பாளர் யூ.கே. ரேணுக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

வீதி விதிமீறல்களுக்கு குறைந்தபட்டமாக 25,000 ரூபா அபராதத்தை அறவிடும் வர்த்தமானி அறிவித்தல் அரசாஙகத்தினால் வெளியிடப்பட்டமை உள்ளிட்ட சில காரணங்களை முன்னிறுத்தி இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த அபராதத் தொகை ஊடாக அதிக வேகத்தில் வாகனத்தை செலுத்துதல், இடது பக்கமாக வாகனத்தை முந்திச் செல்லும் சட்டத்தை நீக்குதல் மற்றும், மேல் மாகாண பேருந்துகளுக்கு ஒரு நிறத்தை அறிமுகப்படுத்தியுள்ளமை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், எதிர்வரும் 9ஆம் திகதி நள்ளிரவு முதல் இரண்டு நாட்கள் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள சில தொடருந்து தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

தொடருந்து இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட இதனைத் தெரிவித்துள்ளார்.

வேதன பிரச்சினை உள்ளிட்ட சில பிரச்சினைகளின் அடிப்படையில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ள இந்தப் போராட்டத்தில் தொடருந்து நிலைய அதிபர்கள், இயந்திர சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் தொடருந்து கண்காணிப்பு முகாமையாளர்கள் இணைந்து கொள்ள உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்