புதன், நவம்பர் 4, 2026
Breaking
Srilanka

கொழும்பிலிருந்து – யாழ்ப்பாணம் செல்வோருக்கான மகிழ்ச்சியான செய்தி இதோ….!

பகிர: Facebook WhatsApp X Telegram
யாழில் நித்திரை தூங்கிய ரயில் கடவை காப்பாளரால் நடக்கவிருந்த பாரிய விபத்து!

கொழும்பு முதல் வவுனியா வரையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள கடுகதி புகையிர சேவையை யாழ்ப்பாணம் வரையில் ஈடுபடுத்த புகையிரத திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதற்கமைய நாளை மற்றும் நாளை மறுதினங்களில் சேவையில் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கொழும்பிலிருந்து பிற்பகல் 3.55 இற்கு புறப்படும் கடுகதி புகையிரத சேவை நள்ளிரவு 12.00 மணிக்கு யாழ்ப்பாணத்தை சென்றடையும்.

யாழ்ப்பாணம் சென்றடையும் குறித்த புகையிரம் நாளை மறுதினம் (13) அதிகாலை 3.00 மணிக்கு கொழம்பு நோக்கி புறப்படும் என புகையிரத திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்