புதன், நவம்பர் 4, 2026
Breaking
Srilanka

யாழில் துப்பாக்கிச்சூடு

பகிர: Facebook WhatsApp X Telegram
யாழில் துப்பாக்கிச்சூடு

யாழ். மாதகல் பகுதியில் பொலிஸாரினால் நேற்று மாலை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு, கஞ்சா போதைப்பொருள் வியாபரி ஒருவர் கைது செய்யப்பட்டார் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். எனினும் தாம் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாதகல் பகுதியில் கஞ்சா போதைப்பொருள் வியாபாரியை பொலிஸார் கைது செய்ய முயன்றபோது, சந்தேகநபர் அங்கிருந்து தப்பி செல்ல முற்பட்டதாகவும் இதன்போது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அத்தோடு இதன்போது குறித்த நபரை பொலிஸார் கைது செய்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

எனினும் இந்த விடயம் தொடர்பாக இளவாலை பொலிஸார் மறுப்பு தெரிவித்துள்ளனர். இளவாலை பொலிஸாரினால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.

மேலும் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சித்தங்கேணி பகுதியில் வைத்து 7.2 கிலோ கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவரை கைது செய்ததாக தெரிவித்துள்ளனர்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்