புதன், நவம்பர் 4, 2026
Breaking
Srilanka

யாழில் வீதியின் சென்றுக்கொண்டிருந்த பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

பகிர: Facebook WhatsApp X Telegram
வெளிநாட்டில் நிர்க்கதியாகி உள்ள இலங்கை பெண்களை காப்பாற்ற நடவடிக்கை

பெண் ஒருவரின் சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பியோடிய நபர் ஒருவரை பொலிஸார் துரத்திப் பிடித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றது.

யாழ்ப்பாணம், வல்வெட்டிதுறைப் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

வல்வெட்டித்துறை பகுதியில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவரின் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அறுத்துச் சென்றதாக வல்வெட்டித்துறை பொலிசார் மூலம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவிற்கு தகவல் வழங்கப்பட்டது.

இதனை அடுத்து துரிதமாக செயற்பட்ட புலனாய்வுப் பிரிவினர் மந்திகை – துன்னாலைக்கு இடைப்பட்ட அல்லையம்பதி பகுதியில் வைத்து சங்கிலியை அறுத்த வழிப்பறிக் கொள்ளையரை மடக்கிப் பிடித்து நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்