புதன், நவம்பர் 4, 2026
Breaking
Srilanka

யாழ் கோப்பாயில் கோர விபத்து! மூன்று பெண்கள் உட்பட நால்வரின் நிலை?

பகிர: Facebook WhatsApp X Telegram
பொலிஸ் அதிகாரியுடன் கம்பி நீட்டிய 42 வயது குடும்பப் பெண் கணவன் கண்ணீருடன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு..!!

யாழ். கைதடிப் கோப்பாய் பாலத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மூன்று பெண்கள் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்த நால்வரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஒட்டுசுட்டானைச் சேர்ந்த மு.பாலசுப்பிரமணியம் (வயது 60) அவரது மனைவி பா.மேரி கில்டா (53) கைதடி மேற்கை சேர்ந்த கி.ரொலிஸ்ரா (வயது 32) மற்றும் ஜெ.ரொமினா ஆகிய நால்வரே காயமடைந்தனர்.

ஒட்டுசுட்டானைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் தம்பதிகள் நீர்வேலியில் உள்ள தமது உறவினர் வீட்டுக்குச் சென்று தமது வீடு நோக்கி திரும்பும் வழியில் கோப்பாய் பாலத்தில் அவர்களின் மோட்டார் சைக்கிள் சறுக்கிச் சென்று முன்னால் பயணித்துக்கொண்டிருந்த பெண்களின் மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளாகியது.

இதனையடுத்து, பாலசுப்பிரமணியம் தம்பதிகள் படுகாயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு ஏனைய இரு பெண்களும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் அதிக மழை பெய்ததன் காரணமாக பாலம் சறுக்கும் தன்மையுடன் காணப்பட்டமையாலேயே, குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்