புதன், ஒக்டோபர் 28, 2026
Breaking
Srilanka

முகநூலில் புலிகளின் படத்துக்கு லைக் போட்டதாக முன்னாள் போராளியை 4ஆம் மாடிக்கு அழைத்து விசாரணை

பகிர: Facebook WhatsApp X Telegram
போர்க் குற்றச்சாட்டில், முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர், ஜேர்மனில் கைது!

முகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றுக்கு விருப்பிட்டார் (Like) என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் வாக்குமூலம் பெறப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.

தெல்லிப்பளையைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவரே நேற்று (18) வியாழக்கிழமை விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.

முகநூல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றை லைக் செய்தமை தொடர்பில் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் தலைமையகமான நான்காம் மாடியில் முன்னிலையாகுமாறு முன்னாள் போராளிக்கு தெல்லிப்பளைப் பொலிஸாரால் அழைப்புக் கடிதம் வழங்கப்பட்டிருந்தது.

அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டவாறு அவர் நேற்று வியாழக்கிழமை நான்காம் மாடிக்குச் சென்றிருந்தார். அவரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணைக்குட்படுத்தினர்.

தங்களுடன் நெருக்கமானவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே விசாரணைக்கு அழைக்கப்பட்டீர்கள் என பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் தெரிவித்ததாக முன்னாள் போராளி கூறியுள்ளார். விசாரணைகளின் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்