யாழில் பரபரப்பை ஏற்படுத்திய முரண்பாடு! 8 பேரின் நிலை

யாழ்ப்பாணம், கம்பர்மலை முத்துமாரி அம்மன் கோவிலில் கரகம் எடுப்பதில் ஏற்பட்ட முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இரண்டு தரப்புகளுக்கு இடையே இடம்பெற்ற வாள்வெட்டு மோதலில் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

வல்வெட்டித்துறைப் பொலிஸார் இதனை தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வடமராட்சி கம்பர்மலை முத்துமாரி அம்மன் கோவிலில் கரகம் எடுப்பதில் இரண்டு தரப்புகளுக்கு இடையே முரண்பாடு ஏற்பட்டது.

அது கைகலப்பாக மாறியதில் 8 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் ஊரனி மற்றும் மந்திகை வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.