திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Srilanka

மட்டக்களப்பு தற்கொலையாளியை நன்கு அறிந்த தமிழ் பேசும் முக்கிய அமைச்சர்

பகிர: Facebook WhatsApp X Telegram
மட்டக்களப்பு தற்கொலையாளியை நன்கு அறிந்த தமிழ் பேசும் முக்கிய அமைச்சர்

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் மேற்கொண்டவர் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இந்த தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்டவர் காத்தான்குடி 6ஆம் பிரிவு தைக்கா வீதியை சேர்ந்த முகமட் காசிம் முகமட் றில்வான் என தெரியவருகிறது.

இவர் தவ்ஹீத் ஜமாத் அமைப்பை சேர்ந்தவர் எனவும், கடந்த 2007ஆம் ஆண்டு காத்தான்குடியில் இடம்பெற்ற குண்டு வெடிப்புடன் தொடர்புபட்டு பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவர் எனவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 12ஆம் திகதி வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு திரும்பிய இவர் கடந்த 16ஆம் திகதி காத்தான்குடியில் வாழ்ந்து வந்த மனைவி மற்றும் 4 வயதுடைய ஒரு குழந்தையையும் அங்கிருந்து அழைத்து சென்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

இந்த நிலையில் சந்தேகநபரின் மனைவி பாணந்துறைப் பகுதியில் வைத்து நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அந்த பெண்ணின் (மனைவியின்) பெற்றோர் காத்தான்குடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை குண்டுதாரியாக அடையாளம் காணப்பட்டுள்ள மேற்படி நபர் காத்தான்குடியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதத்தில் செயற்படுபவர்.

அத்துடன் இவர் இராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானாவிற்கு நன்கு தெரிந்த, நெருங்கிய நபர் எனவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நபருடன் தொடர்பு கொண்டுள்ள நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த அசம்பாவிதம் தொடர்பில் ஒரு வாரத்திற்கு முன்னரே இராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானாவுக்கு தெரிந்துள்ளது.

எனினும் இது தொடர்பில் உரிய தரப்பினருக்கோ, பொலிஸாருக்கோ தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன் என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்