இலங்கையில் ரூபாயின் பெறுமதி பாரிய வீழ்ச்சி

அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதியின் படி இலங்கை ரூபாவுக்கான பெறுமதி குறைவடைந்துள்ளது.இதனை இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 179.2 ரூபாவாகவும், கொள்வனவு விலை 175.7 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் சரிவடைந்துள்ளது.