வெள்ளி, ஒக்டோபர் 30, 2026
Breaking
Srilanka

கொழும்பில் பிரதான பள்ளிவாசல் வளாகத்திலிருந்து ஆயுதங்கள் மீட்பு! பயங்கரவாதி சஹ்ரானுடையதா?

பகிர: Facebook WhatsApp X Telegram
கொழும்பில் பிரதான பள்ளிவாசல் வளாகத்திலிருந்து ஆயுதங்கள் மீட்பு! பயங்கரவாதி சஹ்ரானுடையதா?

கொழும்பு, மாளிகாவத்தையிலுள்ள பிரபல பள்ளிவாசல் வளாகத்தில் வாள்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுகததாஸ விளையாட்டு மைதானத்திற்கு அருகிலுள்ள பள்ளிவாசலில் வாள்கள் மீட்கப்பட்டுள்ளன.

பள்ளிவாசல் வளாகத்திலுள்ள கிணறு ஒன்றிலிருந்து வாள்கள் மற்றும் உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளளனர்.

உரப்பை ஒன்றில் கட்டப்பட்ட நிலையில் இந்தப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த கிணற்றில் மேலும் பல பொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பொலிஸார் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எம்.எம்.22 துப்பாக்கி, பல்விதமான 46 வாள்கள், சீடிகள் என பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்தப் பொருட்கள் தொடர் தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் பயன்படுத்தியதாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட சீடிகள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்