செவ்வாய், நவம்பர் 3, 2026
Breaking
Srilanka

பிறந்த நாளை கொண்டாட யாழில் ஒன்று கூடிய ஆவா குழுவினர்! முக்கிய சந்தேக நபர்கள் தப்பியோட்டம்

பகிர: Facebook WhatsApp X Telegram
பிறந்த நாளை கொண்டாட யாழில் ஒன்று கூடிய ஆவா குழுவினர்! முக்கிய சந்தேக நபர்கள் தப்பியோட்டம்

யாழ். நல்லூர் பகுதியில் ஒன்று கூடிய ஆவா குழுவின் உறுப்பினர்களை பொலிஸார் சுற்றிவளைத்த போதும் வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் எனத் தேடப்படும் சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ். நல்லூர் பருத்தித்துறை வீதியில் ஆனைப்பந்திக்கு அண்மையாகவுள்ள விடுதி ஒன்றில் ஆவா குழு உறுப்பினர்கள் 50 பேர் வரை ஒன்று கூடியுள்ளனர்.

ஆவா குழுவின் உறுப்பினர் ஒருவரின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கு அவர்கள் ஒன்று கூடியுள்ளனர் என்று யாழ்ப்பாணம் சிறப்புப் பொலிஸ் பிரிவுக்கு தகவல் கிடைத்திருந்தது.

அதனடிப்படையில் அந்த விடுதிக்குள் சிறப்புப் பொலிஸ் பிரிவினர் நுழைந்தனர். எனினும் பொலிஸார் உள்நுழைவதை அறிந்த முக்கிய சந்தேகநபர்கள் விடுதியின் பின்பக்க மதிலால் பாய்ந்து தப்பி ஓடியுள்ளனர்.

அவர்கள் தமது மோட்டார் சைக்கிள்களையும் கைவிட்டு விடுதியின் பின்பக்க மதிலால் தப்பித்தனர். இதனையடுத்து, அங்கிருந்த சுமார் 30 பேரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, ஐந்து பேரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். தப்பிச் சென்றவர்கள், யாழ்ப்பாணத்தில் நடந்த அண்மைய வன்முறைகளுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட ஐவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் இல்லாவிடின் அனைவரும் விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்படுவர் என்று பொலிஸார் கூறினர்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்