புதன், ஒக்டோபர் 28, 2026
Breaking
Srilanka

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அத்துரலியே ரதன தேரரின் நிலை

பகிர: Facebook WhatsApp X Telegram
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அத்துரலியே ரதன தேரரின் நிலை

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அத்துரலியே ரதன தேரர் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நான்கு நாட்களாக தொடர்ச்சியாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த அத்துரலியே ரதன தேரர் ஆளுநர்களான அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோரின் பதவி விலகலை அடுத்து தனது உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தேரரின் உடல்நிலையை கருத்திற்கொண்டு அவர் அம்பியுலன்ஸ் வண்டி மூலம் கண்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்