பிறந்த திகதியின் படி உங்களோட மிகப்பெரிய பலவீனம் இதுதான்! இவர்களை மாத்திரம் ஒருபோதும் பகைத்துக் கொள்ள வேண்டாம்?

உங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய ரகசியங்கள் உங்களுடைய பிறந்த எண்ணில் இருக்கிறது.

ஏனெனில் நமது எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் நம்முடைய பிறந்த எண் முக்கியப்பங்கை வகிக்கிறது. பிறந்த திகதியால் உங்களுடைய பலம் மற்றும் பலவீனம் என்னவென்பதை கணிக்கமுடிம்.

இதனை படித்து உங்கள் பலவீனங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

பிறந்த எண் 1
1, 10, 19 மற்றும் 28 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் 1 ஆகும். இவர்கள் சூரியனால் ஆளப்படுகிறவர்கள்.

இந்த திகதிகளில் பிறந்தவர்களின் பலவீனம் என்னவெனில் அதிகம் வீண் செலவு செய்வது. அதிகம் செலவழிப்பதில் இருந்து விலகி இருக்க வேண்டும்.

அதனையும் மீறி அவர்கள் தொடர்ந்து செலவு செய்தால் அவர்கள் கடினமான பொருளாதார பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிடும்.

பிறந்த எண் 2
2, 11, 20 மற்றும் 29 ஆகிய திகதிகள் இருப்பவர்களின் பிறந்த எண் 2 ஆகும். இவர்கள் சந்திரனால் ஆளப்படுகிறவர்கள்.

இந்த திகதிகளில் பிறந்தவர்களின் பலவீனம் என்னவெனில் எளிதில் பதட்டமடைய கூடியவர்களாக இருப்பார்கள். சிறிய சறுக்கல்கள் கூட அவர்களின் நம்பிக்கையை சிதைக்கக்கூடும்.

பிறந்த எண் 3
3, 12, 21 மற்றும் 30 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் 3 ஆகும். இந்த தேதிகளில் பிறந்தவர்களின் பலவீனம் என்னவெனில் அவர்கள் தங்களின் செலவுகளை திட்டமிடுவதில் இவர்கள் எப்பொழுதும் கோட்டை விட்டுவிடுவார்கள்.

பிறந்த எண் 4
4, 13, 22 மற்றும் 31 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் 4 ஆகும். இந்த எண்ணில் பிறந்தவர்களின் பலவீனம் அதிக உணர்ச்சிவசப்படுவதாகும். இதனால் அவர்கள் எப்பொழுதும் மன அழுத்தத்துடன் காணப்படுவார்கள். அதேசமயம் சிலசமயங்களில் மிகவும் பிடிவாதமாகவும் நடந்து கொள்வார்கள்.

பிறந்த எண் 5
5, 14, 23 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் 5 ஆகும். இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு அடிக்கடி உடல்நல குறைவு ஏற்படும், இவர்கள் தங்கள் ஆரோக்கியத்தின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம் ஆகும்.

பிறந்த எண் 6
பிறந்த திகதி 6, 15 மற்றும் 24 ஆகா உள்ளவர்களின் பிறந்த எண் 6 ஆகும். இந்த எண்ணில் பிறந்தவர்கள் எங்கு சென்றாலும் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பவராக இருப்பார்கள். இவர்களின் மிகப்பெரிய பிரச்சினையே மற்றவர்களை எளிதில் நம்பிவிடுவதுதான்.

பிறந்த எண் 7
7, 16 மற்றும் 25 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் 7 ஆகும். இட்னஹ் எண்ணில் பிறந்தவர்கள் தங்களுக்கான விதிமுறைகளை தானே உருவாக்கி கொள்பவர்கள், மற்றவர்களின் கருத்தை பற்றி கவலைப்பட மாட்டார்கள். இவர்கள் குறுகிய காலத்திலேயே வெற்றியை அடைந்து விடுவார்கள், இதனால் அவர்களுக்கு ஆணவம் கொஞ்சம் அதிகமாக இருக்கும். அதேசமயம் தன்னை விரும்புபவர்களை காயப்படுத்துவதை இவர்கள் வழக்கமாக கொண்டிருப்பார்கள்.

பிறந்த எண் 8
8, 17 மற்றும் 26 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் 8 ஆகும். இந்த எண்ணில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்க்கையை அனுபவித்து வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் அதனால் அதிக சுதந்திரமாக வாழ விரும்புவார்கள். இவர்களை மற்றவர்கள் அடிக்கடி தவறாக புரிந்து கொள்வார்கள். அதனாலேயே இவர்களுக்கு நண்பர்கள் மிகவும் குறைவாகவே இருப்பார்கள்.

பிறந்த எண் 9
9, 18 மற்றும் 27 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் 9 ஆகும். செவ்வாயால் ஆளப்படுவதால் இவர்கள் எப்பொழுதும் பதட்டமாகவும், கவலையாகவும் இருப்பார்கள்.

இவர்கள் கடினமாக உழைக்க கூடியவராக இருந்தாலும் எப்பொழுதும் இவர்களை சுற்றி எதிர்மறை சிந்தனைகள் இருந்து கொண்டே இருக்கும். மூர்க்கத்தனமும், முன்கோபமும் இவர்களிடம் அதிகமிருக்கும் அதுதான் இவர்களின் பலவீனமும் கூட.