புதன், ஒக்டோபர் 28, 2026
Breaking
Srilanka

இலங்கைத் தமிழ் யுவதிக்கு அமெரிக்காவில் அடித்த அதிர்ஷ்டம்! குவியும் பாராட்டுகள்

பகிர: Facebook WhatsApp X Telegram
இலங்கைத் தமிழ் யுவதிக்கு அமெரிக்காவில் அடித்த அதிர்ஷ்டம்! குவியும் பாராட்டுகள்

அமெரிக்க சீரியல் உலகத்தில் நகைச்சுவையால் தனியிடம் பிடித்த Mindy Kaling தயாரித்து நடிக்கும், அடுத்த நகைச்சுவை தொடரில் கனடாவில் வசிக்கும் இலங்கை தமிழ் யுவதியொருவர் நடித்துள்ளார்.

மைத்திரேயி ராமகிருஷ்ணன் என்ற தமிழ் யுவதியே நெட்ஃபிக்ஸ் தொடர்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

17 வயதான இந்த யுவதி, பாடசாலையில் நாடகங்களை தயாரித்து நடித்துள்ளார். கவனத்தை ஈர்த்த நாடகங்களில் நடித்ததை தொடர்ந்தே, இந்த மகத்தான வாய்ப்பு அவரை தேடி வந்துள்ளது.

இந்திய, அமெரிக்க பின்னணியுடைய ஒரு இளைஞனை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள தொடரிலேயே மைத்திரேயி நடித்துள்ளார்.

ஊடகமொன்றிற்கு அளித்த போட்டியில், இலங்கை எனது நாடு அல்லவென குறிப்பிட்டுள்ளார் மைத்திரேயி. ஆனால் நிச்சயமான தமிழ்தான் எனது கலாச்சாரம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

“இலங்கை எங்களை அழிக்க முயன்ற நாடு. நாங்கள் விருப்பத்தால் அல்ல, சூழ்நிலைகளால் இடம்பெயர்ந்தோம். கடந்த பல வருடங்களாக இலங்கை அரசியலை கவனிக்காமல் விட்டுவிட்டேன்.

10 வருடங்களின் முன்னர் பெற்றோருடன், போருக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டேன். போர்க்குற்றம் பற்றிய விழிப்பணர்வை ஏற்படுத்தும் பணியிலும் ஈடுபட்டிருந்தேன்“ என தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்