புதன், ஒக்டோபர் 28, 2026
Breaking
Srilanka

நல்லூர் ஆலயத்தில் பெண்கள் செய்த மோசமான செயல்!

பகிர: Facebook WhatsApp X Telegram
நல்லூர் ஆலயத்தில் பெண்கள் செய்த மோசமான செயல்!

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்தத் திருவிழாவில் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிலையில் அதில் இருபதுக்கும் மேற்பட்டோரிடம் திருடர்களால் நகைகள் அபகரிக்கப்பட்டிருந்தன.

சுமார் 45 தங்கப் பவுண் நகைகள் தேர்த்திருவிழாவில் திருடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் குறித்த திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புபட்டிருப்பார்கள் எனும் சந்தேகத்தில் முழங்காவிலைச் சேர்ந்த 50 வயதுக்கு மேற்பட்ட இருவரை பொலிஸார் கைது செய்திருந்தனர்.

சந்தேகநபர்கள் இருவரும் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி பொலிஸாரின் கைதுக்கு கடும் ஆட்சேபனை தெரிவித்தார்.

இதனையடுத்து இருதரப்பு விண்ணப்பங்களையும் ஆராய்ந்த நீதிவான் , இருவர் மீதான குற்றச்சாட்டை உரிய முறையில் முன்வைக்க பொலிஸார் தவறியதால் , சந்தேகநபர்கள் இருவரையும் தலா ஒரு லட்சம் ரூபா ஆள் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்