புதன், ஒக்டோபர் 28, 2026
Breaking
Srilanka

யாழ் நீதிமன்ற மறியல் கூண்டிற்குள் வைத்து கழுத்தை அறுத்த நபர்! மரண ஓலமிட்டு கதறிய தாய்!

பகிர: Facebook WhatsApp X Telegram
யாழ் நீதிமன்ற மறியல் கூண்டிற்குள் வைத்து கழுத்தை அறுத்த நபர்! மரண ஓலமிட்டு கதறிய தாய்!

ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற மறியல் கூடத்துக்குள் வைத்து தனது கழுத்தை பிளேட்டால் கீறி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

2 கிராம் 400 மில்லிக்கிராம் ஹெரோயின் அவரது உடமையிலிருந்து கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். இதன் காரணமாக சந்தேக நபர் கடந்த ஜூலை 5ஆம் திகதியிலிருந்து தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது சந்தேகநபரின் விளக்கமறியலை நீடித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் சந்தேகநபர் நீதிமன்ற மறியல் கூடத்துக்குள் தடுத்து வைக்கப்பட்டார்.

இதன் போதே சந்தேக நபர் இன்று முற்பகல் 10 மணியளவில் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார் எனவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அதனையடுத்து உடனடியாக சிறைச்சாலை வாகனத்தை வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. எனினும் அவரை சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல சிறைச்சாலை வாகனம் வர சுமார் அரை மணிநேரம் தாமதமானது.

அதனால் சந்தேக நபரின் தாயார் நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்குள் பெரும் சத்தமிட்டு குரல் எழுப்பினார். அதனையடுத்து பொலிஸார் அவரை நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே அழைத்துச் சென்று நீதிமன்றில் அமைதியை ஏற்படுத்தினர்.

இதேவேளை, சந்தேகநபரை தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கும் நோக்குடன் ஹெரோயினை அவரது உடமைக்குள் திணித்து சோடிப்பு வழக்கைத் தாக்கல் செய்தனர் என்று சந்தேகநபரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர் எனவும் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்